Advertisment

"இந்தியாவிற்கு செல்ல வேண்டாம்" - குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா!

centers for disease control and prevention america

இந்தியாவில் கரோனாபரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 59 ஆயிரத்து 170 பேருக்கு கரோனாஉறுதியாகியுள்ளது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 1,761 உயிரிழந்துள்ளனர்.

Advertisment

இந்தநிலையில், இந்தியாவில் கரோனாதீவிரமாக பரவி வருவதால், அமெரிக்கநோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு தங்கள்நாட்டு மக்களை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாகஅமெரிக்காவின்நோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், தற்போதுள்ளநிலையில் இந்தியாவில், கரோனா தடுப்பூசிகளை முழுவதுமாக செலுத்திக்கொண்ட (இரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொண்ட) பயணிகள் கூட கரோனாதொற்றால் பாதிக்கப்படுவதற்கும், அதனை பரப்புவதற்குமான ஆபத்து இருப்பதால், இந்தியாவிற்கு செல்லவிருக்கும் அனைத்து விதமான பயணங்களையும் தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

Advertisment

மேலும், இந்தியாவிற்கு கட்டாயம் செல்ல வேண்டுமென்றால், தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை செலுத்திக்கொள்ள வேண்டும், முகக் கவசம் அணிய வேண்டும், 6 அடி தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும், கூட்டத்தை தவிர்க்க வேண்டும், கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என அமெரிக்கநோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது.

travels corona virus India America
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe