ADVERTISEMENT

ஒரு லட்சம் கோடி நன்கொடை அளித்த பிரபல தொழிலதிபரின் முன்னாள் மனைவி!

12:43 PM May 30, 2019 | santhoshb@nakk…

உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் (வயது 55). இவர், அமேசான் நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்பு நாவலாசிரியரான மெக்கின்சியை (48) காதலித்து, திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 3 ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில், ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே பிரிந்து வாழ்ந்து வந்த ஜெப் பெசோஸ் மற்றும் மெக்கின்சி ஆகிய இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் முறைப்படி விவாகரத்து பெற்றனர். அதனை தொடர்ந்து, ஜெப் பெசோஸ், தனது சொத்தில் 25 சதவீதத்தை மனைவி மெக்கின்சிக்கு ஜீவனாம்சமாக கொடுக்க முடிவு செய்தார். அதன்படி 35 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி) மெக்கின்சிக்கு வழங்குவதாக அவர் அறிவித்தார். இதன் மூலம் உலகிலேயே அதிக தொகையை மனைவிக்கு ஜீவனாம்சமாக கொடுத்தவர் என்கிற பெருமைக்கு ஜெப் பேசோஸ் சொந்தக்காரர் ஆனார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்த நிலையில் தனது சொத்தில் சரிபாதியை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்குவதாக மெக்கின்சி வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவித்துள்ளார்.அதவாது 18.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.1 லட்சத்து 29 ஆயிரம் கோடி) நன்கொடையாக வழங்க இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் வாழ்வதற்கு தேவையானதை விட அதிகமான சொத்துகள் என்னிடம் உள்ளன” என குறிப்பிட்டுள்ள, மெக்கின்சியின் இந்த கொடை உள்ளத்தை அவரது முன்னாள் கணவர் ஜெப் பெசோஸ் பாராட்டி உள்ளார். இது பற்றி அவர் டுவிட்டரில், “மெக்கின்சி, மனநேய அணுகுமுறையில் மிக சிறப்பாகவும், நல்ல சிந்தனையுடனும் செயல்படுகிறார். அவரை நினைத்து நான் பெருமை கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT