உலகம் முழுவதும் ஆன்லைன் மூலம் பொருட்கள் விற்பனை செய்வதில் முன்னணி நிறுவனமான அமேசான் உணவு டெலிவரியில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியள்ளது. தற்போது உலகம் முழுவதிலும் உணவு டெலிவரி செய்வதில் முன்னிணியில் இருக்கும் நிறுவனங்களில் சோமேட்டோ மற்றும் ஸ்விகி. தற்போது இந்த நிறுவனங்களுக்கு போட்டியாக அமேசான் நிறுவனமும் உணவு டெலிவரி செய்யும் சேவையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இந்த சேவையில் அமேசான் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த தீபாவளிக்கே இதை துவங்குவதாக இருந்த அமேசான் சிறிய காலதாமதத்துக்கு பிறகு வரும் மார்ச் மாதம் இதை துவக்க உள்ளதாக கூறப்படுகின்றது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Follow Us