Advertisment

அமேசான் காட்டில் 17 நாட்கள் தவித்த குழந்தைகள்; நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சம்பவம்

amazon forest flight incident four child recover safety

கொலம்பியாவில் உள்ள அமேசான் வனப்பகுதியில் இருந்து தனிவிமானத்தில் சன் ஜொஷி டி கவ்ரி நகருக்கு கடந்த 1 ஆம் தேதி ஒரு தம்பதியினர் அவர்களது 11 மாதக் குழந்தை உட்பட 4 குழந்தைகளுடன் பயணம் செய்தனர். இவர்கள் சென்ற விமானமானது அமேசான் வனப்பகுதிக்கு மேலேவான்வெளியில் பறந்தபோது விமானி தங்களது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாகவிமான கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்துள்ளார். அதன் பிறகு சிறிது நேரத்திலேயே விமானமானது, விமான நிலையத்துடன் தனது கட்டுப்பாட்டை இழந்தது.

Advertisment

இந்நிலையில் காணாமல் போன விமானத்தைதேடும் பணி நடைபெற்று வந்தது. மேலும் இந்த தேடுதல் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள், மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டனர். கடந்த 15 ஆம் தேதிவிமானத்தின் சில பாகங்கள் சிதைந்தநிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்ட தேடுதல் பணியில் விமானத்தில் பயணம் செய்த விமானிமற்றும் குழந்தைகளின் தாய் மற்றும் தந்தைஆகிய மூவரின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

Advertisment

மேலும் இந்த விமானத்தில் பெற்றோருடன் பயணம் செய்த குழந்தைகள் பற்றியவிபரம் ஏதும் தெரியாத நிலையில் தொடர்ந்து தேடுதல் பணியில் ராணுவ வீரர்கள்ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் விபத்து நிகழ்ந்த 17வது நாளில் 11 மாத குழந்தை உள்பட 3 குழந்தைகளை ராணுவ வீரர்கள் கண்டுபிடித்துள்ளனர். குழந்தைகள் கடந்த 17 நாட்களாக வனப்பகுதியிலேயேசிறிய அளவில் அங்கு கிடைத்த பொருட்களைக் கொண்டு குடில் போன்றுஅமைத்துதங்கி இருந்ததும்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது இதுகுறித்து கொலம்பியா அதிபர் ட்விட்டரில்,இந்த தேடுதல் முயற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கும்தனது நன்றியைத்தெரிவித்ததுடன், குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார்.

Military colombia children flight amazon
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe