அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் மீது அமேசான் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

Advertisment

amazon files lawsuit on pentagon

பென்டகனை டிஜிட்டல் மயமாக்க ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டதில் அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இந்திய மதிப்பில் சுமார் 71 ஆயிரம் கோடி மதிப்புள்ள இந்த பணிகள் அமேசான் நிறுவனத்திற்கே கிடைக்கும் என பேசப்பட்ட நிலையில், இந்த பணிகள் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டன.

இந்நிலையில் ஒப்பந்தத்தை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடந்ததாக பென்டகன் மீது அமேசான் குற்றம் சாட்டிய சூழலில், இது தொடர்பாக வாஷிங்டன் நீதிமன்றத்தில் அமேசான் நிறுவனம் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளது. மதிப்பீட்டு செயல்முறையின் பல அம்சங்களில் குறைபாடுகள் மற்றும் பிழைகள் உள்ளதாகவும் தெளிவற்ற சார்புகள் உள்ளதாகவும் அமேசான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.