பிரான்ஸ் நாட்டில் பட்டபகலில் சாலையில் முதலை ஒன்று ஒய்யாரமாக நடந்து சென்ற வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாண்டீஸ் மாகாணத்தை சேர்ந்த ஜெர்ரி சாலையில் பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள தேநீர் கடையில் அமர்ந்து காபி அருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது முதலை ஒன்று சாலையின் ஒரு புறத்தில் இருந்து மறுபுறத்துக்கு நடந்து சென்றதை கண்ட அவர், தனது போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனை அவர் சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இதை பார்த்த இணையவாசிகள் சாலையில் முதலை நடந்து போவதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.