Advertisment

"உக்ரைனில் உள்ள இந்தியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேறுக"- இந்திய தூதரகம் அறிவுறுத்தல்!

publive-image

Advertisment

ரஷ்யா தற்போது மனிதாபிமான அடிப்படையில் உக்ரைன் மீதான போர் நிறுத்தத்தை மேற்கொண்டிருக்கிறது. எனவே, உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும். ரயில் மற்றும் பேருந்து உள்ளிட்ட ஏதாவது ஒரு போக்குவரத்துச் சேவையைப் பயன்படுத்தி உக்ரைனில் இருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று கீவில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த தகவலை தூதரகம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளது.

ஏற்கனவே, உக்ரைனின் மிகப்பெரிய நகரங்களான கீவ், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில் இருந்து இந்தியர்கள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளனர். சுமி உள்ளிட்ட பகுதிகளில் சிக்கியிருந்தவர்களும் தற்போது பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டுக் கொண்டிருக்கிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

publive-image

Advertisment

இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்களில் உக்ரைனில் உள்ள அனைத்து இந்தியர்களையும் தாயகம் அழைத்து வர தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.

Ukraine
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe