ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் ஐன் (Al ain) நகர் பகுதியில் வானத்தில் திடீரென உருவான துளையால், பொதுமக்கள் அதிர்ச்சியிலும், குழப்பத்திலும் ஆழ்ந்தனர்.

Advertisment

alien hole

இதனை தங்கள் கைப்பேசிகளில் வீடியோ எடுத்த பொதுமக்கள், அதனை மற்றொரு உலகுக்கான வாயில் என வர்ணித்து பகிர்ந்துவருகின்றனர். இந்நிலையில் இது குறித்து வானிலை ஆய்வாளர்கள் தற்போது விளக்கமளித்துள்ளனர்.

Advertisment

மேகங்களில் உள்ள நீர்மம் வெப்பநிலை மாற்றம் காரணமாக உறைநிலையை நோக்கி செல்லும் போது இதுபோன்று நிகழும் எனக் கூறியுள்ளனர். ஒரு மிகப்பெரிய மேகக் கூட்டத்தின் நடுவே விமானம் செல்லும்போது அங்கு ஏற்படும் வெப்பநிலை மாறுபாட்டால் இவ்வாறு ஏற்படும் என தெரிவித்துள்ளனர். இதுபோல ஏற்படும் துளை வடிவம் 50 கிமீ தூரம் வரை பரவி காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் இது ஏலியனின் செயல் எனவோ, வேறு உலகத்திற்கு செல்லும் வழி எனவோ புரளியை நம்பவோ, பரப்பவோ வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Advertisment