அல்பேனியாவின் தலைநகர் திரானாவில் இருந்து 30 கி.மீ. வடமேற்கே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 20 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இரவில் தூக்கத்தில் இருந்த பொதுமக்கள் அச்சத்தில் அலறியடித்தபடி வீடுகளில் இருந்து பாதுகாப்பிற்காக தெருக்களில் குவிந்தனர்.

Advertisment

இந்த நிலநடுக்க பாதிப்பினால் திரானாவில் இருந்து வடக்கே 36 கி.மீ. தொலைவில் அமைந்த துமனே நகரில் இருந்த கட்டிடங்களும் குலுங்கின. கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் சிக்கி ஆண் மற்றும் பெண் என 16 பேர் பலியாகியுள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.