Skip to main content

அல் அக்சா மசூதி மீது தாக்குதல்; குண்டு மழையில் காசா; அமெரிக்கா பேச்சுவார்த்தை

Published on 11/10/2023 | Edited on 11/10/2023

 

Attack on Al Aqsa Mosque; Gaza under bombardment; American negotiations

 

இஸ்ரேல் போரில் காசா போர்க்களமாக மாறிவரும் நிலையில் அங்கு சிக்கித் தவிக்கும் மக்களை பத்திரமாக வெளியேற்றுவது குறித்து அமெரிக்கா ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

 

இஸ்ரேல் மற்றும் எகிப்து அரசுடன் அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சுல்லிவன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் தற்பொழுது அங்கு சிக்கி இருக்கும் மக்கள் மற்றும் மருத்துவ உதவி தேவைப்படும் மக்களை முதல் கட்டமாக எகிப்து எல்லைகளுக்கோ அல்லது தெற்கு இஸ்ரேல் அல்லது கப்பல்கள் மூலம் அண்டை நாடுகளுக்கோ கொண்டு செல்லலாமா என்ற ரீதியில் ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

 

6 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அல் அக்சா மசூதி மீது தாக்குதல் நடத்துவதற்கு இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த மசூதிக்கு முகமது நபி வந்துள்ளதாக நம்பிக்கை உள்ள நிலையில் கிழக்கு ஜெருசலேம் பகுதியில் உள்ள  அல் அக்சா மசூதி மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்துவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 

ஐ.நா மூலம் இரண்டு லட்சத்து 70 ஆயிரம் மக்கள் ஏற்கனவே காசா பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். காசா பகுதியில் மட்டும் 22 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். உலகிலேயே மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதிகளில் ஒன்றாக காசா இருந்து வருகிறது. காசா மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஐந்து நகரங்களில் தொடர்ச்சியாக 50க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய விமானங்கள் குண்டு மழை பொழிந்து வரும் நிலையில் பொதுமக்களையும் அப்பாவி மக்களையும் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என ஐ.நா உத்தரவிட்டிருந்தது. அதனையொட்டி அமெரிக்கா இந்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்