ஸ்பெயினில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித் கலந்து கொண்ட நிலையில் அவர் இயக்கியகார் விபத்துக்குள் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஸ்பெயினின் வலென்சியா நகரில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் கலந்து கொண்டுள்ளார். அப்போது முந்தி செல்ல முயன்ற பொழுது மற்றொரு கார் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. கார் குறுக்கே வந்ததால் அஜித் இயக்கிய கார் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் நல்வாய்ப்பாக நடிகர் அஜித் உயிர் தப்பியுள்ளார். அஜித்துக்கு எந்த பாதிப்பும் இல்லை அவர் நலமாக இருக்கிறார் என முதற்கட்ட தகவல் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்திலும் விபத்து ஏற்பட்டு அதில் அஜித் தப்பித்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.