
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற்று முடிவடைந்த நிலையில், வருகிற மே 2 ஆம் தேதி அதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் வாரிசு யார் என்ற விவாதம் எழுந்தது. அதில் நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தன்னை எம்ஜிஆர் வாரிசுக்கு தகுதியானவர் என்று கூறியதால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித்குமாரின் பிறந்த நாள் வருகிற மே 1 ஆம் தேதி என்பதால் அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பல்வேறு விதத்தில் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.அந்தவகையில் மதுரையில் ''எங்களின் பொன்மனச் செம்மலே'' என்ற வாசகம் அடங்கிய போஸ்டரில் நடிகர் அஜித்குமாரின் புகைப்படம் படத்தை எம்ஜிஆர் போன்று சித்தரிக்கப்பட்டு ஒட்டியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Follow Us