Advertisment

அஜித் அணி ஆஸ்திரேலியாவில் சாதனை! - முதலிடம் பிடிப்பதைத் தடுத்த இனவெறி?  

அண்ணா பல்கலைகழகத்தைச் சேர்ந்த மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின் ஏரோஸ்பேஸ் ரிசர்ச் (விண்வெளி ஆராய்ச்சி) பிரிவில் ஆளில்லாத சிறிய ரக விமானங்களை (drone) வடிவமைக்கும் மாணவர் குழுவுக்கு ஆலோசகராக நடிகர் அஜித்குமார் கடந்த மே மாதம் நியமிக்கப்பட்டார். அவர் வழிநடத்தும் மாணவர் குழுவின் பெயர் 'தக்ஷா' (dhaksha).

Advertisment

ajith team

கடந்த சில நாட்களாகஆஸ்திரேலியாவில் நடந்த UAV மெடிக்கல் எக்ஸ்பிரஸ் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.மருத்துவ பயன்பாட்டுக்கான ஆளில்லா சிறிய ரக விமானங்களை வடிவமைப்பதற்கான போட்டியில்தான் கலந்துகொண்டதுஅஜித் டீம். அவசர காலங்களில், மனிதர்கள் எளிதில் நுழைய முடியா இடங்களில் அல்லது தூரத்தில் இருக்கும் காயமடைந்தவர்களுக்கு உதவும் வகையில் இந்த விமானங்கள் வடிவமைக்கப்படுகின்றன. சர்வதேச அளவில் நடைபெற்றஇந்தப் போட்டியில் சாதித்துஇருக்கிறது அண்ணா பல்கலைகழக மாணவரணி.

dhaksha

Advertisment

செயல்முறை பிரிவில் (practical) ஆளில்லா விமானத்தின் பறக்கும் திறன், மாணவர்களின் தொழில்நுட்ப திறன் சோதிக்கப்படுகிறது. அந்தப் பிரிவில் உலகின் அனைத்து அணிகளையும் விட சிறப்பாக செயல்பட்டு முதலிடம் பிடித்தது இந்த அணி. ஆனால், நேர்முகத் தேர்விலும் நடுவர் குழுவின் ஆய்விலும் ஆஸ்திரேலியஅணியான மொனாஷ் யூஏஎஸ் (Monash UAS) அணிக்கு அதிக மதிப்பெண்கள் கொடுத்து அவர்களை முதலிடம் பெற வைத்துள்ளனர் நடுவர்கள். சிறப்பாக செயல்பட்டும் இத்தகைய முடிவை அறிவித்ததற்குநடுவர்களின் இனவெறியே காரணம் எனவும் குற்றம் சாட்டப்படுகிறது. எனினும் இந்த வெற்றி இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பதாகும்.

'விஸ்வாசம்' படப்பிடிப்பில் இருப்பதால் அஜித்தால்தக்ஷா அணியுடன் ஆஸ்திரேலியா செல்ல முடியவில்லை. தொடர்ந்து தொலைபேசி மூலம் வழிகாட்டுதல்களை வழங்கி அணி வெற்றிக்கு உதவியதாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்கின்றனர்.

ajith annauniversity dhaksha
இதையும் படியுங்கள்
Subscribe