புகைப்பதால் ஏற்படும் மரணத்தைவிட காற்று மாசினால் ஏற்படும் மரணங்கள் அதிகமாக இருக்கிறதென சமீபத்தில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

Advertisment

air pollution

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

ஜெர்மனியில் நடத்தப்பட்ட அந்த ஆய்வில் 2015-ல் காற்று மாசினால் 8.8 மில்லியன் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது அதற்குமுன் 4.5 மில்லியனாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. காற்று மாசினால் ஏற்படும் மரணத்தின் விகிதம் இரட்டிப்பாகியுள்ளது என்பது அச்சத்துக்குரிய விஷயமாக உள்ளது. உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் புகைப்பதால் ஏற்படும் மரணம், வருடத்திற்கு 7 மில்லியன் எனத் தெரிவித்துள்ளது. ஆனால் இதைவிட காற்று மாசினால் ஏற்படும் மரணத்தின் விகிதம் அதிகாமாக உள்ளது என்பது அச்சத்தைக்கூட்டுகிறது.

Advertisment

ஐரோப்பாவில் மட்டும் 7,90,000 மரணங்கள் காற்று மாசினால் ஏற்பட்டுள்ளது. இதில் 40% முதல் 80% வரையிலான மரணங்கள் இதயம் சார்ந்த மரணங்களாக இருக்கிறது. உலகம் முழுக்க காற்று மாசால் ஆண்டுதோறும், 1,00,000 பேரில் 120 பேர் மரணிக்கின்றனர். அதேசமயம் ஐரோப்பாவில் 1,00,000 பேரில் 200 பேர் மரணிக்கின்றனர் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த ஆய்வை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆய்வு குழுவின் ஆய்வாளர்களில் ஒருவரான தாமஸ் முன்சல், “காற்று மாசினால் ஏற்படும் மரணங்கள் புகைப்பதானால் ஏற்படும் மரணங்களைவிட அதிகமாக இருக்கிறது. புகைப்பிடிப்பது என்பது தவிர்க்கக்கூடியது. ஆனால், காற்று மாசு என்பது...?” என்று தெரிவித்துள்ளார்.