a

ஓமன் நாட்டின் தலைநகரான மஸ்கட்டிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு வரை செல்லுக்கூடிய விமானத்தில், மூன்று குழந்தைகள் உட்பட 185 பேர் பயணித்திருக்கிறார்கள். இதில் 4 பேருக்கு மூக்கில் இரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கிறது.

Advertisment

ஓமன் தலைநகரான மஸ்கட்டிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு நோக்கி ஏர் இந்தியா விமானம் ஒன்று நேற்று புறப்பட்டுள்ளது. இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திற்குள் விமானத்தில் காற்றழுத்தப் பிரச்சனை ஏற்பட்டு நான்கு பயணிகளின் மூக்கில் இருந்து இரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கிறது. மேலும் சிலருக்கு காது வலி பிரச்சனையும் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

Advertisment

இதனை அடுத்து விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டு பாதிக்கப்பட்ட 4 பயணிகளுக்கும் விமான நிலைய மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாக அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.