Advertisment

செய்தி வாசிப்பாளர்களுக்கு வந்த சோதனை....

news reader

தற்போதைய உலகில் மனிதன் செய்யும் வேலைகளை ரோபோக்கள் வைத்து செய்துவரும் அளவிற்கு தொழில்நுட்பம் உயர்ந்துவிட்டது. அதுபோல சீனாவில் உலகிலேயே முதன் முறையாக செய்தி வாசிப்பதற்காக ஏஐ ரோபோ ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

இந்த செய்தி வாசிக்கும் ஏஐ ரோபோவை சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த ரோபோக்கள் பார்ப்பதற்கு சீன செய்தி வாசிப்பாளர்களை போன்ற தோற்றத்தில் உள்ளது. மேலும், இந்த ரோபோக்கள் முன்னே எழுதப்பட்டிருக்கும் செய்திகளை அச்சுபிசிறாமல் படிக்கும் அளவுக்கு தொழில்நுட்பங்களை புகுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.செய்திகளுக்கு ஏற்றவாறும் வாயை அசைக்கின்றன.

Advertisment

சீன மற்றும் ஆங்கில மொழியில் செய்திகளை வாசிக்க இரண்டு ஏஐ ரோபோக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஏஐ ரோபோக்கள் 24 மணி நேரமும் சோற்வின்றி தொடர்ந்து பணி புரியும், எந்த ஒரு செய்தியையும் தடுமாறாமல் படிக்கும், மற்ற ஏஐ ரோபோக்கள் போன்று சுயமாக சிந்தித்து முடிவெடுக்காமல், செய்திகளை வாசிக்க மட்டுமே செய்யும்” என்று இந்த ரோபோக்களை உலகிற்கு அறிமுகம் செய்த சின்ஹுவா நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவில் கடந்த நவம்பர் 7ஆம் தேதி நடந்த உலக இணைய மாநாட்டில் இந்த செய்தி வாசிக்கும் ஏஐ ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், இந்த வகை ரோபோக்கள் எப்போது தினசரிப் பயன்பாட்டிற்கு வரும் என்பது தெரியவில்லை. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்று போட்டிப்போட்டுசீனாஇதுபோன்ற ஒரு ரோபோவை உருவாக்கியுள்ளது. ஆனால், இதுபோன்ற ரோபோக்கள் அனைத்து நாடுகளிலும்நடைமுறைக்கு வந்தால் செய்தி வாசிப்பாளர்களின் வேலை வாய்ப்பு என்ன ஆவது?

robot technology china artificial intelligence
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe