POST FB

பேஸ்புக் நிறுவனம் மீண்டும் பேஸ்புக் பயனாளிகளிடம் மன்னிப்புகோரியுள்ளது.

Advertisment

அதாவது, நட்பு வட்டாரத்தில் இல்லாத பேஸ்புக் பயனாளிகளிடமும் தகவல்கள் பகிரப்பட்டதாக தற்போது புதிய சர்ச்சை எழுந்தன. அதனால், அதனை உறுதிப்படுத்தும் வகையில் பயனாளிகளிடம் பேஸ்புக் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

கடந்த மாதம் பேஸ்புக்கில் பிரைவசி செட்டிங்சில் நட்புவட்டாரத்திற்கு மட்டும் என்று பகிரப்பட்ட பதிவுகள் எல்லாம், பொதுவாக நட்பு வட்டாரத்தில் இல்லாதவர்களுக்கும் பகிரப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Advertisment

இதனால் ஒரு கோடியே நாற்பது லட்சம் பயனாளிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக பேஸ்புக் நிறுவனமே உறுதி செய்துள்ளது. கடந்த மாதம் இருபத்தி இரண்டாம் தேதியே இப்பிரச்சனை சரிசெய்யப்பட்டதாக தெரிவித்தாலும். நட்பு வட்டாரத்தில் இல்லாதவர்களுக்கு சென்ற தகவல்களை திரும்ப பெறமுடியவில்லை என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.