Skip to main content

மே 11 பிறகு... முக்கிய முடிவை எடுத்த ட்ரூ காலர்?

Published on 23/04/2022 | Edited on 23/04/2022

 

After May 11 ... True caller made the decision?

 

செல்போனுக்கு வரும் அழைப்புகளை பதிவு செய்வதை நிறுத்த பிரபல நிறுவனமான ட்ரூகாலர் திட்டமிட்டுள்ளது.

 

கூகுள் நிறுவனம் அறிவித்துள்ள புதிய விதிகளுக்கு பிறகு உலகம் முழுவதும் செல்போனுக்கு வரும் அழைப்புகளை பதிவு செய்வதை நிறுத்த முடிவை ட்ரூகாலர் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆண்ட்ராய்டு செயலிகள் மூலம் செல்போன் அழைப்புகளை பதிவு செய்யும் முறையை தடுக்க கூகுள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

இதனால்  வரும் மே 11 ஆம் தேதி முதல் கூகுள் பிளே ஸ்டோரில் செல்போன் அழைப்புகளை பதிவு செய்யும் ஆண்ட்ரைடு செயலிகளை கூகுள் தடை செய்யும். எனவே பயனாளர்கள் செல்போன் அழைப்பை பதிவு (ரெக்கார்ட்) செய்ய விரும்பினால் ஸ்மார்ட் போனில் உள்ள  ரெக்கார்டிங் வசதியை மட்டுமே பயன்படுத்த முடியும். ஸ்மார்ட் போனில் உள்ளமைக்கப்பட்ட ரெக்கார்டிங் வசதி இல்லையென்றால் மே 11 க்கு பிறகு கால் ரெக்கார்டிங் செய்ய முடியாது. கூகுளின் இந்த விதியை பின்பற்றி  ட்ரூ காலர் இந்த முடிவை எடுத்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பப்ஜி கேமில் மூழ்கிய இளைஞர்; தாய் கண்டித்ததால் எடுத்த சோக முடிவு

Published on 04/02/2024 | Edited on 04/02/2024
Youth immersed in pubg game; A sad decision taken because of mother's reprimand

மொபைல் போனில் கேம் விளையாண்டதை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மொபைல் செயலிகள் மற்றும் மொபைல் விளையாட்டுகளில் இளைஞர்கள் சிலர் மூழ்கி கிடக்கும் நிலையில் சில அசம்பாவித சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது. அதுவும் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை வெளிநாட்டு வெர்ஷன்கள் மூலம் பதிவிறக்கி விளையாடும் சூழல் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் சென்னை சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவரான பிரவீன் செல்போனில் பப்ஜி கேம் விளையாடுவதை பொழுதுபோக்காக கொண்டிருந்தார். ஆனால் தொடர்ந்து முழுநேரமாக கேம் விளையாடுவதிலேயே ஆர்வம் காட்டியதால் அவருடைய தாயார் அவரை கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கல்லூரி மாணவர் பிரவீன் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் மீண்டும் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் சமையல் குறிப்பு வீடியோ பார்த்த அதிகாரிகள்

Published on 23/06/2023 | Edited on 23/06/2023

 

Officials watched the recipe video at the Farmers Grievance Meeting

 

வேலூரில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்ட பெண் அதிகாரி ஒருவர் செல்போனில் சமையல் குறிப்பு பார்த்துக் கொண்டிருந்த வீடியோ காட்சிகள் வெளியாகி, அது தொடர்பாக புகார் எழுந்துள்ளது.

 

வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் வந்திருந்தனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டம் சீரியசாக நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது ஒரு பெண் அதிகாரி உள்ளிட்ட சிலர் செல்போனில் யூடியூபில் சமையல் குறிப்பு வீடியோ பார்த்துக் கொண்டிருந்தனர். இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.