Advertisment

குளிர்கால ஒலிம்பிக்ஸ்; சீனாவைக் கண்டித்துப் புறக்கணிக்க அமெரிக்கா, பிரிட்டன் ஆலோசனை!

JOE BIDEN - BORIS JOHNSON

ஒலிம்பிக் போட்டிகள், பாராஒலிம்பிக் போட்டிகள், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆகியவை ஒருநாட்டில் நடைபெறும்போது, மற்ற நாடுகளின் அமைச்சர்கள், அதிகாரிகள் அந்தபோட்டிகளைக் காண சிறப்புத்தூதர்களாக பங்கேற்பார்கள். இந்தநிலையில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் அடுத்தாண்டு சீனாவில் நடைபெறவுள்ளது.

Advertisment

இதனையடுத்து சீனாவின் மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் பொருட்டு, இந்த குளிர்கால ஒலிம்பிக்கை இராஜாங்க ரீதியில் புறக்கணிப்பது குறித்து தாங்கள் பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அண்மையில் தெரிவித்திருந்தார். அவ்வாறு குளிர்கால ஒலிம்பிக்கை அமெரிக்கா புறக்கணித்தால், அந்தநாட்டு வீரர்கள் போட்டியில் பங்கேற்பார்கள். ஆனால் அமெரிக்க அதிகாரிகளோ, அமைச்சர்களோ பங்கேற்கமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இந்தநிலையில் பிரிட்டனும், சீனாவின் மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் விதமாக, அந்தநாட்டில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் தொடரை இராஜாங்க ரீதியில் புறக்கணிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக அந்தநாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

britain America Winter Olympics china
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe