Afghan government has announced  previous govt divorce are invalid

Advertisment

ஆப்கானிஸ்தான்பெண்கள் கடந்த ஆட்சிக்காலத்தில் பெற்ற விவகாரத்து செல்லாது என தாலிபான் அரசு அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே பெண்களுக்கு எதிரான சட்டங்களை அறிவித்து வருகிறது. பெண்கள் படிக்கக்கூடாது, கட்டாயம் புர்கா அணிய வேண்டும், ஆண்கள் முகத்தில் தாடி வைத்துக்கொள்ள வேண்டும் எனப் பல்வேறு பழமைவாதச் சட்டங்களையும் அமல்படுத்தியுள்ளது. இதனால் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில் தாலிபான் அரசு மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆப்கானிஸ்தானில் கடந்த ஆட்சியின் போது பெண்களுக்கு வழங்கப்பட்ட விவகாரத்து செல்லாது என்று அறிவித்துள்ளது. மேலும், கணவர் மதுவிற்கு அடிமையாகி இருந்தாலோஅல்லது வெளிநாட்டிற்குத்தப்பித்துச் சென்றிருந்தாலோ விவாகரத்து செல்லும் எனவும் தெரிவித்துள்ளது. ஆப்கானில் 10 ல் 9பெண்கள் தங்கள் கணவர்களால் கொடுமைக்கு ஆளாவதாகஐ.நா. தெரிவித்திருந்த நிலையில், தற்போது விருப்பம் இல்லாத பெண்களையும் கணவருடன்சேர்ந்து வாழ வழுக்கட்டயமாக அனுப்பி வைக்கும் செயல் இது என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.