afghan girl fights with militants

தனது பெற்றோரைக் கொன்ற தாலிபான் பயங்கரவாதிகளைச்சுட்டுக்கொன்றுள்ளார் ஆஃப்கானிஸ்தான் சிறுமி ஒருவர்.

Advertisment

ஆஃப்கானிஸ்தானில் அரசுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்களைக் குறிவைத்துக் கொன்று வருகிறது தாலிபான். அந்தவகையில் அரசு ஆதரவாளரான கமல்குல் என்பவரைக் கடந்த 16 ஆம் தேதி கோர் மாகாணம் தியோரா மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் புகுந்த பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். கமல்குல் தனது மனைவி மற்றும் மகன், மகளுடன் தனது வீட்டில் வசித்துவந்த நிலையில், வீட்டில் புகுந்த பயங்கரவாதிகள் சிறுமியின் கண்முன்னே கமல்குல் மற்றும் அவரது மனைவியைச் சுட்டுக்கொன்றனர்.

Advertisment

இந்தத் திடீர் தாக்குதலால் செய்வதறியாது திகைத்த சிறுமி, அங்குக் கிடந்த ஏகே-47 துப்பாக்கியை எடுத்துச் சரமாரியாகச் சுட்டதில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பின்னர் அவரது தம்பியும் அந்தத் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனையடுத்து மீதமிருந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இதனையடுத்து அங்கு வந்த மீட்புக் குழுவினர் சிறுவர்கள் இருவரையும் மீட்டுப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றியுள்ளனர். சிறுமியின் இந்தச் செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.