ADVERTISEMENT

தீவிரவாதத்துக்கு எதிரான போர் இது, இந்தியாவுக்கு எங்கள் நன்றி- ஆப்கானிஸ்தான்

03:33 PM Feb 26, 2019 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த 14-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கம் பொறுப்பேற்றுக்கொண்டது. இந்நிலையில், இந்திய விமானப்படையைச் சேர்ந்த போர் விமானங்கள், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பால்கோட் என்ற இடத்தில் நுழைந்து பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

இன்று அதிகாலை 3.30 மணிக்கு 12 மிராஜ் 2000 ஜெட் விமானங்கள் எல்லை தாண்டிச்சென்று சுமார் 1000 கிலோ வெடிகுண்டை பயங்கரவாதிகள் முகாம் மீது வீசி அவை முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இதில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் முக்கிய கமாண்டர்களுள் ஒருவரான யூசுப் அசார் கொல்லப்பட்டார். இந்தியாவின் இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் முன்னாள் செய்தித்தொடர்பாளர் தவாப் ஷோரங் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘பாகிஸ்தானின் பலாகோட் பகுதியில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாமை தகர்த்த இந்திய விமானப்படைக்கு எங்கள் நன்றி. அந்த இடம் தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்கள் நிறைந்த பகுதி என்பது அனைவருக்கும் தெரியும். ஷியா உல் ஹக் காலத்தில் இருந்தே அந்த பகுதியில் தீவிரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். தீவிரவாதத்துக்கு எதிரான போர் இது. இந்தியாவுக்கு எங்கள் நன்றி’’ எனக் கூறியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT