தொழுகையின் போது மசூதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல்... 62 பேர் பலி... 100 க்கும் மேற்பட்டோர் படுகாயம்....

மசூதி ஒன்றில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 62 பேர் பலியான சம்பவம் ஆப்கானிஸ்தான் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

afganistan mosque attack

ஆப்கானிஸ்தானின் ஹஸ்கா மினா மாவட்டம் நங்கர்ஹர் பகுதியில் உள்ள மிகப்பெரிய மசூதி ஒன்றில் பொதுமக்கள் வழக்கம் போல் நேற்று தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் மசூதியின் மேற்கூரை சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த பயங்கர தாக்குதலில் 20 க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இதுவரை 62 பேர் இந்த தாக்குதலால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 100 க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

Afganishtan
இதையும் படியுங்கள்
Subscribe