சவுதி அரேபியாவின் மதினா அருகே யாத்ரீகர்கள் சென்று கொண்டிருந்த பேருந்து, எக்ஸ்கவேட்டர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 35 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

accident in saudi

மெக்காஅருகே பயணிகளை ஏற்றி சென்ற தனியார் பேருந்து ஒன்று கனரக எக்ஸ்கவேட்டர் வாகனத்தின் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் சவுதியை சேர்ந்தவர்கள் மற்றும் ஆசியாவை சேர்ந்த யாத்ரீகர்கள் என 35 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த கோர விபத்தை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும் மீட்பு படையினரும், காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள அல்ஹம்னா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தொடர்ந்து, இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.