மதங்களை அவமதிக்கும் வகையில் நடந்தால் ரூ.7 கோடி அபராதம், 5 ஆண்டுகள் சிறை... அதிரடி உத்தரவு பிறப்பித்த அபுதாபி நீதித்துறை...

எந்த மதங்களை அவமதித்தல் ரூ.7 கோடி அபராதம், 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என அபுதாபி நீதித்துறை அறிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

abudhabi new rule on religion intolerance

மதம், நபி தூதர், தெய்வீக புத்தகம் அல்லது வழிபாட்டு தலம் போன்றவற்றை அவமதிக்கும் எந்தவொரு செயலும் மதத்தை அவமதிப்பதாக கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மக்களை அவர்களது சாதி, மதம் மற்றும் நிற அடிப்படையில் வேறுபடுத்தப்படுவதை அபுதாபி அரசாங்கம் எதிர்ப்பதாக தெரிவித்துள்ள அபுதாபி நீதித்துறை உறுப்பினர் அமீனா அல் மஸ்ரூய் தெரிவித்துள்ளார். எந்த மதத்தையும், மத நம்பிக்கைகளையும் அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டால் ரூ.7 கோடி அபராதம், 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

abudhabi
இதையும் படியுங்கள்
Subscribe