Advertisment

அதிபர் முறை ஒழிப்பு... மீண்டும் ரணில் விக்ரமசிங்கே?

Abolition of the Presidential system ... Ranil Wickremesinghe again?

இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. போராட்டத்தின் பலனாக ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். அதனைத்தொடர்ந்து குருநாகல்லில் உள்ள மஹிந்த ராஜபக்சேவின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

Advertisment

Abolition of the Presidential system ... Ranil Wickremesinghe again?

ஒட்டுமொத்த இலங்கையும் கலவரக் காடாக காட்சியளிக்கும் நிலையில், நாட்டு மக்களுக்கு உரையாற்றிய கோத்தபய ராஜபக்சே, ''கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற வன்முறை செயல்களையும், அதற்கு முன்பு நடைபெற்ற வன்முறை செயல்களையும் யாராலும் நியாயப்படுத்த முடியாது. வன்முறைச் சம்பவங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது உள்ள ஆட்சி நிர்வாகத்தை மீண்டும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு வாரத்திற்குள் புதிய அரசாங்கத்தை நிறுவ உள்ளோம். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்சியின் சார்பில் மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் பிரதமர் மற்றும் அமைச்சரவை நியமிக்கப்பட உள்ளது'' என தெரிவித்துள்ளார். மேலும், 'நாடு இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு நிறைவேற்றுஅதிகாரம் கொண்ட அதிபர் முறையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' எனவும் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கே விரைவில் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ரணில் விக்ரமசிங்கே ஏற்கனவே இலங்கை பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

srilanka
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe