Advertisment

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புதிய பிரதமர் பதவியேற்பு!

new pm of pok

ஜம்மு காஷ்மீரின்ஒரு பகுதியைபாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்றும், ஆசாத் காஷ்மீர் அழைக்கப்படுகிறது. இந்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானின்கட்டுப்பாட்டில் உள்ள சுயாட்சி பெற்ற பிரதேசமாக விளங்கி வருகிறது. இந்த பகுதியில் தேர்தல் நடத்தப்பட்டு, சுயாட்சி அரசு தேர்தெடுக்கப்படுகிறது. இந்த அரசாங்கத்தின் தலைவர் பிரதமர் என அழைப்படுகிறார்.

Advertisment

அந்தவகையில்அண்மையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தேர்தல்நடைபெற்றது. இதில் பாகிஸ்தானின்ஆளுங்கட்சியானபாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி 32 இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றது. இதனையடுத்துபாகிஸ்தான் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான்,அப்துல் காயிம் நியாசி என்பவரை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின்புதிய பிரதமராக தேர்ந்தெடுத்தார். இதனையடுத்து அவர் நேற்று பிரதமாராக பதவியேற்றுக்கொண்டார்.

Advertisment

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தேர்தல் நடத்துவதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்ததோடு, சட்டவிரோதமாக ஆக்கிரமித்த பகுதிகளை விட்டு வெளியேறுமாறு பாகிஸ்தானைவலியுறுத்தியுது குறிப்பிடத்தக்கது.

Pakistan pok prime minister
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe