afghanistan

Advertisment

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலும் தாலிபன்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்ததையடுத்து, அந்தநாடு முழுவதும் தாலிபன்வசமாகியுள்ளது. இதனையடுத்துஆப்கானிஸ்தான்நாட்டில் போர் முடிவுக்கு வந்ததாக தாலிபன்கள்அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் அதிபராக இருந்து வந்தஅஷ்ரஃப் கனி நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். ரத்தம் சிந்துவதை தடுப்பதற்காகத்தான் நாட்டை விட்டு வெளியேறியதாக கூறியுள்ள அவர், தான் ஆப்கானிஸ்தானில் இருந்திருந்தால் எண்ணற்ற தேசபக்தர்கள் இறந்திருப்பார்கள் எனவும், காபூல்சிதைக்கப்பட்டிருக்கும்எனவும் தெரிவித்துள்ளார்.

ஆப்கான் தங்கள் வசம் வந்துள்ளதையடுத்து, இடைக்கால அரசு அமைக்கும் முயற்சியில் தாலிபன்கள் ஈடுபட்டுள்ளதாக வெளிவந்த தகவலைஅந்த அமைப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதற்கிடையேமுல்லா அப்துல் கனி பரதர் என்பவர் ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக நியமிக்கப்படுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

MULLAH ABDUL GHANI BARADAR

Advertisment

முல்லா அப்துல் கனி பரதர், தாலிபன்இயக்கத்தை நிறுவியவர்களுள்ஒருவர்.தலிபான் நிறுவனர் முல்லா உமரின்நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராகமுல்லா அப்துல் கனி பரதர் இருந்ததாகக்கூறப்படுகிறது. தற்போது தாலிபன்களின்அரசியல் பிரிவுத் தலைவராக உள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும் ஒப்பந்தத்தில் தாலிபன்கள் கையெழுத்திட்டதைஇவர்மேற்பார்வை செய்ததுகுறிப்பிடத்தக்கது.