Advertisment

ஆப்கானில் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தும் தலிபான் இணை நிறுவனர்!

abdul ghani baradar

Advertisment

ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்த நாட்டில் போர் நிறைவுபெற்றுள்ளதாக அறிவித்துள்ளதோடு, அங்கு தங்களது ஆட்சியை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ளதாக கூறப்படும் தலிபான் இணை நிறுவனர்முல்லா அப்துல் கனி பராதர், காபூலுக்கு விரைந்துள்ளார்.

காபூலுக்கு விரைந்துள்ளஅவர், ஆட்சி அமைப்பது தொடர்பாக மற்ற தலிபான் தலைவர்களுடனும்அரசியல்வாதிகளுடனும்பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை (17.08.2021) ஆப்கான் வந்தஅப்துல் கனி பராதர், காந்தகரில்தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முல்லா அப்துல் கனி பராதர், தலிபான்இயக்கத்தை நிறுவியவர்களுள் ஒருவர்.தலிபான் நிறுவனர் முல்லா உமரின்நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராகமுல்லா அப்துல் கனி பராதர் இருந்ததாகக்கூறப்படுகிறது. தற்போது தலிபான்களின்அரசியல் பிரிவுத் தலைவராக உள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும் ஒப்பந்தத்தில் தலிபான்கள் கையெழுத்திட்டதைஇவர்மேற்பார்வை செய்ததுகுறிப்பிடத்தக்கது.

afghanistan talibans
இதையும் படியுங்கள்
Subscribe