நீல்ஆம்ஸ்ட்ராங்குக்குபிறகு இரண்டாவதாக நிலவில் காலடிவைத்தவரானஅமெரிக்காவைச் சேர்ந்தவிண்வெளி வீரர்பஸ் ஆல்ட்ரின் தனதுபிறந்தநாளில் சமூக வலைதளத்தில்பகிர்ந்து கொண்டுள்ள பதிவு ஒன்று தற்போதுஉலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.
பஸ் ஆல்ட்ரின் தனது ட்விட்டர் கணக்கில்,"எனது 93வது பிறந்தநாளில்என்னுடைய நீண்டநாள் காதலியானஅன்க்கா ஃபர்என்பவரை திருமணம் செய்துகொண்டதை மகிழ்ச்சியுடன் உங்களுக்குத்தெரிவித்துக் கொள்கிறேன். லாஸ்ஏஞ்சலில்எங்கள் திருமணம் நடைபெற்றது. பதின்பருவ இளைஞர்களைப் போல நாங்கள் உற்சாகமாக உணர்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவுக்கு உலகம் முழுவதிலிருந்து பலரும்தங்களது வாழ்த்துகளை பஸ் ஆல்ட்ரினுக்கு தெரிவித்து வருகின்றனர்.