Advertisment

90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா: சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்றார் சாம் ராக்வெல்

Oscars

90-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த விருதுகள் சினிமாத் துறையின் மிக உயரிய விருதாக கருதப்படுகிறது. மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. ஹாலிவுட் நடிகர்கள் உள்பட பல்வேறு திரையுலக பிரபலங்கள் இதில் பங்கேற்றுள்ளனர். அமெரிக்காவில் நடக்கும் துப்பாக்கி வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு ஊட்டும் வகையில் விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகர்கள் ஆரஞ்சு நிற கோர்ட் அணிந்து வந்திருந்தனர்.

Advertisment

த்ரி பில்போர்ட்ஸ் சைட் எப்பிங் மிசவுரி படத்தில் நடித்த 49 வயதான சாம் ராக்வெல் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை முதல் முறையாக பெறுகிறார்.

Advertisment

சிறந்த ஆடை வடிவமைப்பு- மார்க் பிரிட்ஜஸ், படம்: பாண்ட் த்ரட்

ஆஸ்கர் விருது: சிறந்த சிகை அலங்கார விருது மூன்று பேருக்கு வழங்கப்பட்டது - கஸூ ஹிரோ சுஜி, டேவிட் மலினவ்ஸ்கி, லுசி சிப்பிக்

சிறந்த ஒப்பனை- டார்க்கஸ் ஹவர் படத்தில் பணியாற்றிய மூன்று பேருக்கு வழங்கப்பட்டுள்ளது

சிறந்த முழு நீள ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதினை இகாரஸ் திரைப்படம் வென்றது.

90 th Oscar Awards
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe