Advertisment

போல் டான்சிங் ஆடும் 9 மாத கர்ப்பிணிப் பெண்! திகைக்க வைக்கும் வீடியோ

திடமாக இருக்கும் பெண்களே கர்ப்ப காலங்களில் பலவீனமானவர்களாக மாறிவிடுவார்கள். அதிலும் குறிப்பாக, குழந்தைப் பேருக்காக மட்டும் பெண்கள் படைக்கப்பட்டதுபோல, கர்ப்ப காலங்களில் அதிகப்படியான தடைகளையும் இந்த சமூகம் விதிப்பது வாடிக்கையான ஒன்று. இதெல்லாம் ஒருபுறமிருக்க, தனது நீண்டகால பயிற்சியின் மீது நம்பிக்கை கொண்டு, 9 மாத கர்ப்பிணியான பெண் ஒருவர் போல் டான்சிங் ஆடும் வீடியோ காட்சிகள் அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியிருக்கின்றன.

Advertisment

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் அல்லிசென் சைப்ஸ். தொழில்முறை நடனக் கலைஞரான இவர், கடந்த 13 ஆண்டுகளாக போல் டான்சிங் பயிற்சியிலும், உடற்பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். மேலும், நடனம் மற்றும் உடற்பயிற்சி பயிற்றுனராகவும் பணிபுரிந்து வருகிறார். தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் அல்லிசென் சைப்ஸ், தினமும் போல் டான்சிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். குழந்தை பிறக்க சில தினங்களே இருக்கும் நிலையிலும், சாதாரணமாக அவர் கம்பியில் ஏறி காற்றில் பறந்துஆடும் காட்சிகள் பார்க்கும் பலருக்கும் வயிற்றைப் புரட்டியெடுத்திருக்கின்றன.

Advertisment

மருத்துவரின் ஆலோசனையின்படியே இந்தப் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகக் கூறும் அல்லிசென், வயிற்றுக்கு அழுத்தம் தராமல் இதை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். பலர் இந்த வீடியோவைபாராட்டியிருந்தாலும், சிலரிடம் இருந்து இதற்கு எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது.

America Poll Dancing
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe