8 lakh reward for finding missing Indian student in USA

குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த மயூஷி பகத், கடந்த 2016 ஆம் ஆண்டு எஃப் 1 மாணவர் விசா மூலம் அமெரிக்கா சென்றார். ஜெர்சி சிட்டி பகுதியில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கிநியூஜெர்சி மாகாணத்தில் உள்ள கல்வி நிறுவனத்தில் படித்துக் கொண்டிருந்த அவர், கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.

Advertisment

அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் மயூஷி காணாமல் போனது குறித்து புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து தீவிரமாக போலீஸ் தேடி வந்தனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ., காணாமல் போனவர்களின் பட்டியலில் மயூஷி பகத்தின் பெயரைச் சேர்ந்து விசாரித்து வந்தது.

Advertisment

இந்த நிலையில்தான், எஃப்.பி.ஐ மயூஷி குறித்து தகவல் கொடுத்தால் அமெரிக்க மதிப்பில் 10 ஆயிரம் டாலர்(ரூ.8.33 லட்சம்) வெகுமதி கொடுப்பதாக அறிவித்துள்ளது. மேலும் மயூஷி குறித்த தகவல் தெரிந்தால், எஃப்.பி.ஐ அலுவலகத்திலோ அல்லது ஜெர்சி சிட்டியில் உள்ள காவல் நிலையத்திலோ தகவல் கொடுக்கலாம்; அப்படி கொடுக்கப்படும் தகவலின் மூலம் அவர் கண்டுபிடிக்கப்பட்டால் வெகுமதி கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.