அரசுப்பள்ளி மாணவர்கள் பொதுப்பிரிவில் மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பித்திருந்தாலும்7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவப்படிப்பிற்கு தவறுதலாகப் பொதுப்பிரிவில் விண்ணப்பித்திருந்தாலும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். தவறாக விண்ணப்பித்த மாணவரின் ஆவணங்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு மறுபரிசீலனை செய்யப்பட்டு ஆவணங்கள் சரியாக இருந்தால் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் வாய்ப்பு வழங்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்து இருக்கிறது. வரும் 27 ஆம் தேதிமருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கவிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.