Advertisment

'எனக்கு 73 உனக்கு 33' பஸ் ஸ்டாண்டில் அரும்பிய விநோத காதல்!

ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த ரேச்சல் ராபர்ட்ஸ் என்ற 33 வயது இளம்பெண், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தன் வீட்டிற்கு அருகில் காரில் சென்று கொண்டிருந்த போது அங்கிருந்த பேருந்து நிலையத்தில் நடக்க முடியாமல் சிரமப்பட்டுக்கொண்டிருந்த நெவ் மெக்டேர்மோட் என்ற 73வயது தாத்தாவைப் பார்த்துள்ளார். இதுதொடர்பாக ரேச்சல் அவரிடம் விசாரித்த போது, அவருக்கு காலில் அடிப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டு நடக்கமுடியாமல் சிரமப்படுவதை அறிந்துள்ளார்.

Advertisment

jg

இந்த சந்திப்புக்கு பிறகு இருவரும் அடிக்கடி சந்தித்து பேச ஆரம்பித்துள்ளனர். அது இருவருக்கும் இடையே நட்பை மேலும் அதிரித்தது. இருவருர் மனதிலும் காதல் இருந்தாலும் வயது வித்தியாசம் காரணமாக அதனை வெளிப்படுத்த இருவரும் தயங்கி உள்ளனர். சமீபத்தில் ரேச்சலின் தந்தை இறக்க அப்போது மெக்டெர்மொட் ரேச்சலின் வீட்டுக்கு சென்று அவருக்கு ஆறுதல் சொல்லி, அவருடனே ஒருவாரம் தங்கி இருக்கிறார். இதனால் மனம் மகிழ்ந்த ரேச்சல், அவரிடம் தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார். அவரும் இதனை ஏற்றுக்கொள்ளவே இருவரும் அடுத்தவாரம் திருமணம் செய்ய உள்ளனர்.

love
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe