பீரங்கி குண்டு வெடித்து 7 சிறுவர்கள் பலி, 15 சிறுவர்கள் படுகாயம்...

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள லக்மன் மாகாணத்தின் தலைநகரான மெக்டர்லாமில், பீரங்கி குண்டை வைத்து விளையாடிய சிறுவர்கள் அந்த குண்டு வெடித்ததில் உயிரிழந்தனர்.

7 childeren lost life in afganistan after an unused bomb blasted

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

குறிப்பிட்ட அந்த பகுதியில் வீட்டுக்கு வெளியே சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்களுக்கு வெடிக்காத பீரங்கி குண்டு ஒன்று அங்கு கிடைத்துள்ளது. அது வெடிகுண்டு என்பதை அறியாத அந்த சிறுவர்கள் அதை வைத்து விளையாடியுள்ளனர்.

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் திடீரென அந்த பீரங்கி குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 15 சிறுவர்கள் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Afganishtan
இதையும் படியுங்கள்
Subscribe