Skip to main content

ரோஹிங்யாக்களைக் கொன்ற மியான்மர் ராணுவ வீரர்களுக்கு சிறை!

Published on 11/04/2018 | Edited on 11/04/2018

மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்களைக் கொன்ற அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

Rohingya

 

மியான்மர் நாட்டில் ரோஹிங்யா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ராக்கைன் பகுதியில், மியான்மர் ராணுவ முகாம்களின் மீது ரோகிங்யா கிளர்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மியான்மர் ராணுவத்தினர் ரோஹிங்யா மக்கள் வாழும் பகுதிகளுக்குள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். கிட்டத்தட்ட 6 லட்சம் ரோஹிங்யாக்கள் வங்காளதேசத்தின் எல்லைப்பகுதியில் தஞ்சம் புகுந்தனர்.

 

இந்தத் தாக்குதலின்போது ராக்கைனின் இன் டின் கிராமத்தில் 10 ரோஹிங்யா ஆண்களை, ராணுவத்தினர் கொன்று புதைத்தனர். இதில் தொடர்புடைய நான்கு அதிகாரிகள், 3 படைவீரர்கள் உட்பட ஏழு பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக மியான்மரில் வெளியாகும் குளோபல் லைட் இதழ் தெரிவித்துள்ளது. மேலும், இந்தத் தாக்குதல்களில் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தாலும், அவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என குளோபல் லைட் தெரிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்