Skip to main content

சீனாவில் இதுவரை 64 கோடி பேருக்கு தடுப்பூசி!

Published on 01/06/2021 | Edited on 01/06/2021

 

jk

 

2019 டிசம்பரில் தொடங்கிய கரோனா வைரஸ் பரவல், இன்றும் உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது. கரோனா வைரஸின் பிறப்பிடமாக கருத்தப்படும் சீனாவில் தடுப்பூசி போடும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்றுவருகிறது. சினோஃபார்ம் கம்பெனியின் இரண்டு தடுப்பூசிகள், அதனுடன் சினோவேக், கான்சினோ என நான்கு வகையான தடுப்பூசிகள் அந்நாட்டில் பொதுமக்களுக்குப் போடப்பட்டுவருகிறது. இந்த மாத இறுதிக்குள் 40 சதவீத சீன மக்களுக்குத் தடுப்பூசி போடும் திட்டம் உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருந்த நிலையில் இதுவரை 63.91 கோடி பேருக்குத் தடுப்பூசி போட்டப்பட்டுள்ளது.

 

மொத்த எண்ணிக்கை 63 கோடியைத் தாண்டியிருந்தாலும், எத்தனை பேர் 2 டோஸ்களையும் போட்டுள்ளனர் என்ற விபரத்தை சீன அரசு வெளியிடவில்லை.

 

 

சார்ந்த செய்திகள்