/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rere_0.jpg)
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளின் வடக்குப் பகுதியில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. புக்கிட்டிங்கி நகரத்திலிருந்து 66 கிலோமீட்டர் தூரத்தில் 12 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகா பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள், வீடுகள் இடிந்துள்ளன. இதில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தையடுத்து நிலச்சரிவு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)