200 இஸ்லாமிய மதகுருக்கள் உட்பட 600 பேரை உடனே நாடுகடத்த இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisment

islam clerics

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இலங்கையின் கொழும்புவில் கிறிஸ்துவ தேவாலயங்கள் மற்றும் தாங்கும் விடுதிகளை குறி வைத்து நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களில் 300 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 500 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதனையடுத்து நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார் அதிபர் சிறிசேனா.

Advertisment

இதனை தொடர்ந்து ராணுவம் மற்றும் காவல்துறைக்கு அதிகப்படியான அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் பலரும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இதில் விசா காலம் முடிந்தபிறகும் தங்கியிருப்போர் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் வெளிநாடுகளை சேர்ந்த 600 பேர் அதிரடியாக நாடு கடத்தப்பட்டு உள்ளனர். இதில் 200 பேர் இஸ்லாமிய மதகுருக்கள் ஆவர். அவர்களிடம் இருந்து அபராதமும் வசூலிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் சட்டப்பூர்வமாக இலங்கைக்கு வந்திருந்தாலும், தற்போது நடத்தப்பட்ட சோதனையில் அவர்களின் விசா காலம் முடிந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர்வஜிரா அபய்வர்தனே தெரிவித்தார்.

இதனையடுத்து வெளிநாட்டினருக்கான குறிப்பாக மத பிரசாரகர்களுக்கான விசா நடைமுறைகளில் பல்வேறு கட்டுப்பாடுகளை இலங்கை அரசு கொண்டு வந்திருக்கிறது.