Advertisment

சாலையிலேயே கொல்லப்பட்ட 59 வயது முதியவர்; 8 சிறுமிகள் சேர்ந்து செய்த கொலை

59-year-old man injured by 8 girls; A sensation in Canada

கனடாவில் 59 வயதுடைய முதியவரை 8 சிறுமிகள் கொலை செய்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கனடாவின் டொரோண்டா நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 13 முதல் 16 வயதுடைய சிறுமிகள் 59 வயதுடைய முதியவரை கத்தியால் குத்தி கொலை செய்தனர்.

Advertisment

இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து சிறுமிகளை கைது செய்தனர். அப்பொழுது 3 சிறுமிகள் 13 வயதுடையவர்கள் என்றும், 3 சிறுமிகள் 14 வயதுடையவர்கள் என்றும், 2 சிறுமிகள் 16 வயதுடையவர்கள் என்றும் தெரிந்தது. அந்த சிறுமிகள் அனைவரும் நகரத்தின் வேறு வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்கள் என்பதும், அவர்கள் இணையத்தில் அறிமுகமானவர்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், மாலைப்பொழுதில் அந்தப் பகுதியில் அவர்கள் ஏன் கூடினார்கள் என எங்களுக்குத் தெரியவில்லை. மேலும், அவர்கள் எதற்காக கூடினார்கள் என்றும் தெரியவில்லை. கத்தியால் குத்துவதற்கு முன்இரு தரப்பிற்கும் இடையே ஏதோ ஒரு கடுமையான வாக்குவாதம் நடந்துள்ளது என்பது மட்டும் தெரிகிறது” எனக் கூறினர்.

மேலும் காவல்துறையினர் கூறுகையில் அவர்கள் ஒரே அணி அல்ல. அவர்கள் ஒரே இடத்தில் திரண்டுள்ளனர். அவர்களிடம் இருந்து சில ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது எனக் கூறினர்.

கனடாவின் சட்டங்கள் காரணமாக கொலை செய்த பெண்களின் அடையாளங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

police Canada
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe