pakistan rupees

பாகிஸ்தானில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு இறந்தவர் ஒருவரின் வங்கிக்கணக்கில் நேற்று சுமார் 450 கோடி ரூபாய் பணம் போடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் கராச்சியை சேர்ந்த இஃபால் ஆராய்ன் கடந்த 2014 மே மாதம் 9ம் தேதி அன்று உடல்நல குறைவால் மரணமடைந்தார். இவர் இறந்து நான்கு வருடங்களுக்கு பின் தற்போது இவரது வங்கிக்கணக்கில் ரூ.450 கோடி பணம் போடப்பட்டுள்ளது. இது பாகிஸ்தான் உளவுத்துறையை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. எனென்றால் இவரது வங்கிக்கணக்கில் இவ்வளவு பணம் போடும் அளவிற்கு, அவரின் குடும்பமும், சொந்தமும் இவ்வளவு வசதி அடைந்தவர்கள் இல்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

இச்சம்பவம் போன்றே பாகிஸ்தானில் அடிக்கடி நடப்பதால், இது தீவிரவாதிகளின் செயலாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் இருக்கின்றனர் பாகிஸ்தான் உளவுத்துறை இருக்கிறது.