Advertisment

3,700 பேருடன் கடலில் சிக்கித்தவிக்கும் கப்பல்... பயணிகளுக்கு வேகமாக பரவும் கரோனா...

சுமார் 3,700 பயணிகளுடன் ஹாங்காங் சென்ற டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் 61 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment

41 more corona cases found in Diamond Princess ship

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

கடந்த ஜனவரி 20-ம் தேதி 3,700 பயணிகளுடன் ஜப்பானின் யோகோஹாமா நகரில் இருந்து ஹாங்காங் புறப்பட்டது டைமண்ட் பிரின்சஸ் கப்பல். பின்னர் ஹாங்காங்கில் இருந்து ஜப்பானுக்கு திரும்பும்போது, கப்பலில் இருந்த 80 வயது முதியவர் ஒருவருக்கு கரோனா வைரஸ் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ஜப்பானுக்கு வந்த அந்த கப்பலுக்கு பிப்.1-ம்தேதி அனுமதி மறுக்கப்பட்டது. அதன்பிறகு பயணிகளுக்கு கரோனா சோதனை நடத்தப்பட்டதில், 20 பேருக்கு கரோனா தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த சூழலில் மேலும் 273 பேருக்கு சோதனை நடத்தப்பட்டதில் மேலும் 41 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன்காரணமாக சுமார் 3,000 பயணிகளுடன் ஒகினாவா மாகாணம் அருகே கப்பல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த கப்பலில் சிலருக்கு இருமல் இருப்பதாக அங்குள்ள பயணிகள் தெரிவித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், பயணிகள் அவர்களுக்கான தனி அறைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதோடு, கப்பலுக்குள் நடமாடவும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

china corona virus Japan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe