ADVERTISEMENT

மே அமைச்சரவையிலிருந்து நான்கு அமைச்சர்கள் ராஜினாமா....பிரெக்சிட் எதிரோலி

11:28 AM Nov 16, 2018 | santhoshkumar


ஐரோப்பிய யூனியளிருந்து பிரிட்டன் வெளியேறுவது குறித்து கடந்த 2016ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் பொது வாக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இதில் 51.89 சதவீத மக்கள், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர். 48.11 சதவீத மக்கள், அந்த முடிவுக்கு எதிராக வாக்களித்தனர். ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவதை’பிரெக்சிட்’ என்று அழைக்கப்பட்டது. யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதில் உடன்பாடில்லாத அப்போதைய இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகினார். இதனை அடுத்து தெரசா மே பதவி ஏற்றார். பிரிட்டன் விலகுவதற்கு, அந்த கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இப்போது அது தொடர்பாக 585 பக்கங்களைக் கொண்ட ஒரு வரைவு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் பற்றி நேற்று முன்தினம் 5 மணி நேரம் விவாதம் நடத்தி பிரதமர் தெரசா மே தனது மந்திரிசபையின் ஒப்புதலை பெற்றார்.

ADVERTISEMENT

இந்நிலையில், இந்த விலகலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்திய வம்சாவளியான அமைச்சர் சைலேஷ்வரா தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து மேலும் மூன்று அமைச்சர்கள் பதவி விலகினார்கள். அடுத்தாண்டு மார்ச்சுக்குள் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலக முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக வரைவு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வரைவு ஒப்பந்தம் திருப்தி அளிக்காததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெரசா மே அமைச்சரவையிலிருந்து 4 அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர். இது பிரதமர் தெரசா மேவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT