Advertisment

அடுத்தடுத்து 4 முறை ஏற்பட்ட நிலநடுக்கம்; இந்தியாவிலும் தொடரும் அச்சம்

4 consecutive earthquakes; Fear continues in India too

Advertisment

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் கேம்பல் பே என்ற பகுதியில் நேற்று பிற்பகல் 1.16 மணியளவில் 4.9 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில்இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து சில மணி நேரம் இடைவெளியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பயத்தில் உள்ளனர்.

நிலநடுக்கம் ஏற்பட்டதை தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. பிற்பகல் 3 மணியளவில் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆகப்பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமும் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில்ஏற்பட்டது. மூன்றாவது முறையாக 5.3 ரிக்டர் அளவிலும்நான்காவது முறையாக 5.5 ரிக்டர் அளவுகோலிலும்சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

Advertisment

வங்கக்கடல் பகுதியில் தொடர்ச்சியாக 4 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் அந்தமான் பகுதி மக்கள் மட்டுமல்லாது இந்திய மக்களும் சுனாமி குறித்த அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில் சுனாமி எச்சரிக்கை எதுவும் தற்போதைக்கு இல்லை என்று புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோ பொருள் சேதமோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

earthquake
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe