3400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு, பின்னர் நீரால் சூழப்பட்ட அரண்மனை தற்போது வரதச்சி காரணமாக வெளியே தென்பட்டுள்ள அதிசயம் ஈராக் நாட்டின் நடந்துள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
ஈராக்கின் மிக முக்கிய நதியான திக்ரிஸ் நதி கடும் வறட்சி காரணமாக பல ஆண்டுகளுக்கு பின் வறண்டுள்ளது. நீண்ட காலமாக மழை இல்லாதது, கடும் வெயில் உள்ளிட்ட காரணங்களால் அந்த நதி வற்றிய நிலையில், அது சென்று சேரும் மிகப்பெரிய அணையான மொசூல் அணையும் வறண்டு போனது.
பல ஆண்டுகளாக நீரால் நிரம்பியிருந்த அந்த அணை, தற்போது வறண்டு மணல் பரப்பாக மாறியுள்ள வேளையில், அதன் உள்ளிருந்து பழங்கால அரண்மனை ஒன்று வெளியே தென்பட்டுள்ளது.65 அடி ஆழத்தில் கண்டறியப்பட்ட இந்த அரண்மனை, 2 மீட்டர் அகலம் கொண்ட சுவர்களையும், பல அறைகளையும் கொண்டுள்ளது. மேலும் இந்த அரண்மனையை சுற்றி சாலை வசதிகளும், கல்லறை தோட்டமும் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இதனை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள் தற்போது அங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட ஆய்வில் இந்த அரண்மனை 3400 ஆண்டுகள் பழமையானது என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அங்கு ஒருசில எழுத்துருக்களும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வை தொடர்ந்து மேற்கொள்ளும் நிலையில் மனித நாகரிக வளர்ச்சியை குறித்து புதிய தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.