Advertisment

பாகிஸ்தானுக்கு 337 ரன்கள் இலக்கு!

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும்இந்தியா பாகிஸ்தானுக்குஇடையிலான கிரிக்கெட் போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி பாகிஸ்தானுக்கு 337 ரன்கள் இலக்காக வைத்துள்ளது.

Advertisment

பாகிஸ்தானுக்கு 337 ரன்கள் இலக்கு!

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்கள் எடுத்தது. இந்திய அணி வீரர்கள் ரோகித் சர்மா 140 ரன்களையும், விராட் கோலி77 ரன்களையும், லோகேஷ் ராகுல் 50 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஷிகர் தவானுக்குமாற்றாக களமிறக்கப்பட்ட தமிழக வீரர் விஜய் சங்கர் ஆட்டமிழக்காமல் 15 ரன்கள் எடுத்தார்.

Advertisment

பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக முகமது அமீர் 3 விக்கெட்டுகளையும், ஹஸன் அலி, ரியாஸ் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்த ரன்களில் இதுவே அதிக ரன்கள்என்பது குறிப்பிடத்தக்கது.

cricket India Pakistan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe