அமரிக்காவில் உள்ள விஸ்கான்சின் சிறையில் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர் ஃபாண்ட் டு லாக்ஸ் டான் கோர்ஸ்கே. 64வயது நிரம்பிய இவர் தற்போது ஒரு கின்னஸ் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

 30,000th Big Mac ameican

ஃபாண்ட் டு லாக்'ஸ் டான் கோர்ஸ்கே மே 17, 1972 ஆம் ஆண்டு முதல் உலக புகழ்பெற்ற மெக் டொனல்டில் 'ஹங் பர்கரை'தினமும் உண்டு வந்துள்ளார். தற்போது 46 ஆண்டுகளில் 30 ஆயிரம் பர்கர்களை உண்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். இவர் கூறுவது உண்மைதானா என்ற சந்தேகம்ஏற்படலாம். ஆனால் அதற்கு சான்றாக 46 ஆண்டுகள் வாங்கிய பர்கர்களின் அட்டைப்பெட்டிகளையும், பில்களையும் வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தொலைந்த ஒரு சில பில்களின் ஆதாரமாக வீட்டு காலண்டரில் குறித்து வைத்துள்ளார். ஆனால் 2016 ஆம் ஆண்டே இவர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துவிட்டார். அப்போது இவர் உண்ட ஹங் பர்கர்களின் எண்ணிக்கை 28,788 ஆகும். இந்த 30,000மாவது பர்கரை கடந்த வெள்ளிக்கிழமை உண்டார். இவர் உண்ணஆரம்பித்த356வது நாளில்1000 பர்கர்களை உண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1984 ஆம் ஆண்டு மேக் டொனால்ட் நிறுவனர் ரே கிராக் இறந்தபொழுது, அதுவரைக்கும்கோர்ஸ்கே 5,978 பர்கர்கள் உண்டுள்ளார்.

Advertisment

இதுகுறித்து கோர்ஸ்கே கூறியது. " நான் ஹங் பர்கர் உண்ணாமல் இருப்பது என்றால் என் தாயின் நினைவு நாள் அன்று மட்டும்தான். ஏனென்றால் ஏப்ரல் 27, 1988 ஆம் ஆண்டு என் தாய் என்னிடம் ஒரு சத்தியம் வாங்கினார் என் நினைவுநாள் அன்று மட்டும் நீ ஹங் பர்கர் உண்ணக்கூடாது என்று". இத்தனை காலம் ஹங் பர்கர் உண்டாலும் அவருக்கு இரத்த அழுத்தம், கொழுப்பு ஆகியவை சீராக உள்ளது.

ஹங் பர்கர் உண்பதில் மற்றொரு கின்னஸ் சாதனையும் உள்ளது. ஒரு நிமிடத்தில் ஐந்து பர்கர் உண்டதுதான் அந்த கின்னஸ் சாதனை. இந்தோனேசியாவை சேர்ந்த ரிச்சர்டோ ஃ பிரான்சிஸ்கோ என்பவர் ஒரு நிமிடத்தில் ஐந்து ஹங் பர்கர் உண்டதுதான் இதுவரை உலகசாதனையாகஉள்ளது. இந்த சாதனையை2017ஆம் ஆண்டு நிகழ்த்தினார். அதற்கு முன்பு 2013 ஆம் ஆண்டு ஒரு நிமிடத்தில் நான்கு பர்கர் உண்டதுதான் சாதனையாகஇருந்தது.