
பிரமிடுகளுக்கும், மம்மிகளுக்கும் புகழ்பெற்ற நாடு எகிப்து. இந்த நாட்டில்3000 வருடங்கள் பழமையான நகரம் தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கி.மு. 1390 காலகட்டத்தில் எகிப்தை ஆட்சி செய்தஅமன்ஹோடெப் III என்பவரது ஆட்சிக்காலத்தில், இந்த நகரம் உருவாக்கப்பட்டதாகதொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நகரம் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம், எகிப்திய பேரரசு செல்வ செழிப்புடன் இருந்த காலகட்டத்தில், பண்டைய எகிப்தியர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை அறிவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள தொல்லியலாளர்கள், இந்த நகரத்தில் சேதமடையாத சுவர்கள், வெதுப்பகம், அடுப்புகள், கல்லறைகள், கருவிகள் நிறைந்த அறைகள், மோதிரங்கள், வண்ணப்பானைகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதாகவும், மேலும் நூற்பு மற்றும் நெசவு, உலோக உற்பத்தி மற்றும் கண்ணாடி தயாரித்தல் உள்ளிட்ட பல தொழிற்சாலைகள் இருந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும்கூறியுள்ளனர்.
வரலாற்றின்படி தற்போது கண்டுபிடிக்கப்பட்டநகரத்தில் அமன்ஹோடெப் III க்கு சொந்தமான மூன்று மாளிகைகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனாபரவலால் பாதிப்படைந்த எகிப்திய சுற்றுலாத்துறைக்கு, தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நகரம்கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)