300 Indians plane Police are actively investigating

300இந்தியர்கள்துபாயில் இருந்து தனியார் விமானத்தை பிரத்யேகமாக வாடகைக்கு எடுத்து நிகரகுவா என்ற நாட்டுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். மேலும் இவர்கள் அங்கிருந்து சட்டவிரோதமாக அமெரிக்கா, கனடா செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்த சூழலில் துபாயில் இருந்து 300 இந்தியர்களுடன் நிகரகுவா நாட்டுக்கு சென்ற விமானம் பிரான்ஸில் எரிபொருளுக்காக தரையிறங்கி உள்ளது.

Advertisment

அப்போது ஆள் கடத்தல் நடந்ததாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விமானத்தில் பயணித்த இந்தியர்களில் சிலர் தமிழ் பேசுவதாக விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களா அல்லது இலங்கையை சேர்ந்தவர்களா என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது மட்டுமின்றி விமானத்தில் பயணம் செய்த பெரும்பாலானோர் இந்தி உள்ளிட்ட வட மாநில மொழிகளை பேசுவதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த 300பேரில் 2 பேரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisment

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் விமானத்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் இந்தியர்கள் என தெரிய வந்துள்ளது. அதிலும் குஜராத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் உள்ளனர். ஒரே விமானத்தில் ஒரே நேரத்தில் 300பேர் வந்ததன் நோக்கம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.